நெல்லில் பொக்கு விதைகளை நீக்கம் செய்தல்
ஒரு வாளியில் 5 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு அவற்றில் உப்பு தூள் சிறிதளவை கொட்ட வேண்டும் கொட்டி நன்றாக கலந்து அதில் ஒரு கோழி முட்டையை எடுத்து அந்த உப்பு தண்ணீரில் வைத்தால் அவை 25 பைசா அளவிற்கு மிதக்க வேண்டும்
அவ்வாறு மிதந்தால் உப்புக் கரைசல் தயார்
இந்த உப்பு கரைசலில் ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையை எடுத்து அதில் கொட்டி நன்றாக கலக்கிவிடனும் மேலே மிதக்கும் விதைகளை நீக்கி விட்டு அடியில் தங்கி இருக்கும் விதையை நல்ல தண்ணீர் ஊற்றி இரண்டுமுறை நன்றாக அலசி ஒரு கோணி சாக்கு இட்டு கட்டி வைக்கவும்.
நெல்லில் முளைப்பு தெரியும் அவற்றை பாய் நாற்றங்கால் அல்லது வயலில் மேட்டு பாத்தி அமைத்து அதில் தூவிட்டால் எந்த வித நாற்றுக்களும் பழுதில்லாமல் 100 சதவீதம் நன்றாக முளைத்து இருக்கும் அவற்றை நாம எடுத்து விதைநேர்த்தி செய்து நடவு வயலில் நடலாம்