#பயிர் சாகுபடியில் சத்துக்கள் மேலாண்மை
நாம விவசாயம் செய்யும் பொழுது பயிரில் தோன்றும் அறிகுறிகள் பூச்சி மற்றும் நோயினால் வந்ததா, அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையா வயலில் என்னென்ன உரம் போடப்பட்டது என்ன உரம் போடவில்லை என்பதையும் முதலில் தெரிந்து கொண்டு அதன்பிறகு பயிருக்கு சத்துக்களை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
சத்துக்களில் நகரும் சத்துக்கள். நகராத சத்துக்கள் என இரண்டு வகைபடும். அவை நகரும் சத்துக்கள் செடியில் பழைய இலையில் உள்ள சத்துக்கள் வளரும் இலைக்கு போகும் போது அவை நகரும் சத்துக்கள் எனப்படும் மேல் இலைக்கு அடி இலை) பின்னாடி உள்ள இலைகளில் சத்துக்கள் நகராது.
(யூரியா) தழைச்சத்து உரம் அதிகமாக செடியில் இருந்தால் உடனே தழைச்சத்தை சரிசெய்ய பொட்டாஷ் உரம் போடவேண்டும்.
பொட்டாஷ் உரம் சத்துக்களை பிரித்து பயிருக்கு கொடுக்கும்.
தழைச்சத்தை பயிர் அமோனியா வடிவில் எடுத்துக்கொள்ளும். அவை எல்லாமே புரோட்டினாகவும் அமினோ அமிலமாகவும் மாறவேண்டும். இவ்வாறு மாறினால் அவை புரதமாக மாறிவிடும்.
தழைச்சத்து அதிகமாக போட்டால் அமினோ அமிலம் புரதமாக மாறாது. அப்படி மாறுவதற்கு பொட்டாஷ் போடவேண்டும். இவை சத்துக்களை பிரித்து பயிருக்கு கொடுக்கும் (அமோனியா – அமினோ அமிலம் – புரதம் – தாவரத்திற்கு சத்து இதபோல் பிரித்துக் கொடுக்கும்.)
பயிர்களுக்கு இரசாயன உரங்கள் மூலம் மட்டும் சத்தை அளிப்பதோடு மட்டுமல்லாம், அதிக அளவு இயற்கை உரங்களையும் மண்ணில் இட வேண்டும். இவ்வாறு மண்ணில் இடும் இயற்கை உரங்கள் சில அங்கக அமிலங்களை வெளியிடுகின்றன.
இந்த அமிலங்கள் மண்ணில் பயிர்களுக்கு கிடைக்காத நிலையில் உள்ள தழைச்சத்து மற்றும் மணிச்சத்தினை பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் மண்ணின் வளத்தையும் பாதுகாக்கிறது.
தற்போது நம் நாட்டில் மைக்கோரைசா என்னும் வேர்உட்பூசணம் விவசாயிகளிடையே பிரபலமாகி வருகிறது. இதனை மண்ணில் இடுவதன் மூலம் மணிச்சத்தினை அதிக அளவில் எடுத்துக் கொள்ளவும், பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கவும் உதவுகிறது.
மணிச்சத்தை கரைக்கும் சூடோமோனஸ் உயிர் உரத்தை விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். பயிர்களுக்கு கிடைக்காத நிலையில் இருக்கும் மணிச்சத்தினை கரைத்து பயிர்களுக்கு கிடைக்கும் வழியில் மாற்றிக் கொடுக்கிறது.
மண்ணில் எவ்வளவுதான் உரங்கள் இட்டாலும் அவற்றின் உபயோகத்திறனை அதிகரிக்காவிடில் உரங்கள் வீணாவதோடு மட்டுமல்லாமல் மண்ணின் வளமும் குறைகிறது.
எனவே மண்பரிசோதனை அடிப்படையில் உரமிடல், இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்களை இடுதல் போன்ற ஒருங்கிணைந்த உரமேலாண்மை வழிமுறைகளை பின்பற்றினால் பயிர்களின் மணிச்சத்து உபயோகத்திறனை அதிகரிக்கலாம்.
பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து முக்கிய சத்துக்களும் சாண எருவில் தான் உள்ளது
பேரூட்டச்சத்துக்களும், நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளது பொதுவாக தழைச்சத்து பயிர் நன்கு செழித்து வளரவும் மணிச்சத்து வேர் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகிறது
எனவே மணிச்சத்து உரத்தை எப்பொழுதும் அடியுரமாகவே முன்கூட்டியே போட்டு விட வேண்டும்.
சாம்பல்சத்து பொருளின் தரத்தை மேம்படுத்த உதவும்.
சுண்ணாம்புசத்து, கந்தகசத்து, மெக்னீசியசத்து நுண்ணூட்டச்சத்தாக இருப்பதோடு நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது
மேற்கூறிய வழிமுறைகள் எல்லாமே விவசாயிகளால் எளிதாக பின்பற்றக் கூடியனவேயாகும். எனவே விவசாயப் பெருமக்கள் அத்தகைய உரமேலாண்மை முறைகளை கடைப்பித்தால் பயிர் சாகுபடியில் செலவினங்களை குறைத்து வருவாயை அதிகரிக்க முடியும்.