வியாபர நோக்கம்.., அரசியலுக்காக இயற்கையான #பனங்கள்ளு, #தென்னைகள்ளுதடை செய்ய பட்டு இருப்பது மாற வேண்டும்…!!!

வியாபர நோக்கம்.., அரசியலுக்காக இயற்கையான #பனங்கள்ளு, #தென்னைகள்ளுதடை செய்ய பட்டு இருப்பது மாற வேண்டும்…!!!

#கள் FAQ’s,

1. #கள்என்றால்என்ன ?

#பனை, #தென்னை மரங்களில் பாளையை பக்குவப்படுத்தி சீவினால் தேன் போன்ற இனிப்பான திரவம் கிடைக்கும். அது சற்று நொதித்து புளிப்பு சுவையாக மாறினால், அதுதான் கள்

2. பதநீர் என்றால் என்ன ?

மண் கலையத்தில் சுண்ணாம்பு தடவி பனை, தென்னை மரங்களின் பாளைகளில் இருந்து கிடைக்கும் திரவத்தை சேகரித்தால், அதுதான் பதநீர்.

3. கள் மது வகையா ?

கள் மது வகை கிடையாது. உணவு வகைகளில் ஒன்று. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 47, கள்ளை உணவாகவும், மருந்தாகவும் வகைப்படுத்தி உள்ளது.

4. கள் போதை தருமா ?

புளித்த மாவில், தயிரில் கிட்டத்தட்ட 2% ஆல்காஹல் உள்ளது. கள்ளில் 2%-4% ஆல்காஹல் உள்ளது, இதனால் போதை வராது, கள் குடித்த பிறகு, சூடாக காரமான உணவுகளை உண்டால் சிறிது போதை வரும்

5. கள்ளால் என்ன பயன் ?

பல ஊட்டச்சத்துகள் உள்ளன, சில நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது, தடை நீக்கப்பட்டால் #பனை மரங்கள் அழிவதை தடுக்கலாம், பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும்

6. கள் மதுவுக்கு மாற்று பொருளா ?

கள்ளுக்கும், மதுவுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. கள் மதுவுக்கு மாற்று பொருள் கிடையாது. உணவில் உள்ள சத்துகள் கள்ளில் உள்ளன, விஸ்கி பிராந்தியில் சத்துகள் இல்லை, இரண்டும் வெவ்வேறு வியாபாரங்கள்.

7. கள்ளுக்கு தடை ஏன் ?

அரசாங்கத்தால் கள்ளில் நடக்கும் கலப்படத்தை தடுக்க முடியவில்லை என்று காரணம் கூறி கொள்கை முடிவாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

8. உலகில் வேறு எங்கெல்லாம் கள் தடை செய்யப்பட்டுள்ளது ?

வேறு எங்கும் இல்லை.

9. கள்ளை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடிக்கலாமா ?

பிறந்த குழந்தைகள் கூட குடிக்கலாம்.

10. கள்ளை மருத்துவத்துறை எதிர்க்கிறதா ?

எதிர்ப்பதில்லை.

11. கள் பற்றி அரசுகளின் கள ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன ?

கள் தடை கூடாது, மக்களுக்கு தரமான கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கள் விற்பனையை கூட்டுறவு (அ) தன்னார்வலர் அமைப்புகள் (அ) அல்லது மரமேறுவோர் சங்கம் மூலம் நடத்த வேண்டும் என்பதே

பிற மாநிலங்களில் நீதிபதிகள் தலைமையிலான ஆய்வு குழுக்களின் பரிந்துரை ஆகும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories