சேமிக்கும் தானியங்களை தாக்கும் பூச்சிகளை கண்டறிய உதவும் உபகரணம்……

விவசாயிகள் சாகுபடி முதல், அறுவடை வரை பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பூச்சி தாக்குதல், நோய் அழுகல் போன்ற பயிர்களில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை தவிர்க்க பல்வேறு இடர்பாடுகளை தவிர்க்க பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சாணக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் தானியங்களை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கின்றனர். சேமிக்கும் பொழுது பூச்சிகளின் தாக்குதல் தானியங்களில் ஏற்படுகிறது. இவ்வாறு பூச்சிகள் தாக்குவதால் தானியங்களுக்கு அல்லது கூட்டுப்புழு போன்ற ஏதேனும் ஒரு சில பூச்சி பருவநிலைகளை கொண்டிருக்கும்.

தானியங்களை சேமிக்க ஆரம்பித்த 20 முதல் 25 நாட்களில் இந்த பூச்சி பருவங்களிலிருந்து வளர்ந்த வண்டுகள் வெளியே வரும். சேமிப்பு தானியங்களில் உலவும் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிய கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஓர் எளிய பொறியை கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய பொறியை விவசாயிகள் சுலபமாக மூட்டைகளின் இடுக்குகளில் அதிக தூரம் உள்ளடக்கி வைக்க முடியும்.

பூச்சிகளின் பொறியில் உள்ள துவாரங்களில் நுழைந்து பொறியின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ மூடியில் அகப்பட்டுக் கொள்கின்றன. இப்பொறியால் கோணிப்பைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாது.

அடுக்கப்பட்ட மூட்டைகளின் எந்த பகுதியிலும் பொறியை பயன்படுத்தி நடமாட்டத்தை அறியலாம். பொறியில் எந்தவிதமான இனக்கவர்ச்சி அல்லது. உணவு பொருள்கள் பயன்படுத்தப்படவில்லை.

நெல், மிளகாய், கோதுமையை தாக்கும் பூச்சிகளை பிடிக்க இப்பொறி உதவுகிறது. இப்பொறியை கிடங்குகளில் மூட்டைகளுக்கு இடையில் வைத்து ஒருவாரம் சென்று கண்காணிக்க வேண்டும்.பொறியில் பிடிபட்ட பூச்சிகளை பிடித்து அழிக்கலாம்.

அரிசி வண்டு, பயறு வண்டு, சிவப்பு வண்டு, அரம்போல் அமைப்பு கொண்ட வண்டு,சிகரெட் வண்டு, நெல் துளைக்கும் வண்டு ஆகிய பூச்சிகளை கண்டறிய இந்த உபகரணம் மிகவும் பயன்படும், மூட்டைகளில் சேமிக்கும் தானியங்களை தாக்கும் பூச்சிகளை கண்டறிய இந்த உபகரணம் பயன்படும். இதன் விலை ரூ.750 ஆகும்.

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories