நீரை சுத்தம் செய்கிறது விதைகள்……

விதைகளை பயன்படுத்தி, கலங்கல் நீரை சுத்தப்படுத்தும் கல்லூரி மாணவி, எஸ்.சசிகலா:…

நான், சென்னை மாநில கல்லூரியில், வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவியாக இருக்கிறேன். கடைகளில் விற்கப்படும்,பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை சோதனை கூடத்தில், “பாக்டீரீயோலாஜிக்கல்’ பரிசோதனை செய்தபோது, நச்சு தன்மை உள்ள கனிமங்கள் இருப்பதுடன், மனித கழிவில் இருக்கும், “ஈகோலி, கோலிபாம்’ பாக்டீரியாக்கள் இருப்பதை உறுதி செய்தேன். இவற்றால், புற்றுநோய் உண்டாகும்.

நோய் ஆபத்தை தவிர்க்கவும், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கவும் முயற்சித்தேன். குடிக்க முடியாத, மாசடைந்த கலங்கலான நீரை, நச்சு தன்மை இல்லாமல், குறைந்த செலவில், நாம் பயன்படுத்தும் விதைகளைக் கொண்டே, குடிநீராக மாற்ற ஆய்வு செய்தேன்.

அப்போது, முருங்கை விதை, தேத்தாங்கொட்டை, அவரை விதை என, இம்மூன்றையும் பொடியாக்கி நீரில் கலந்த போது, நீரில் உள்ள நச்சு தன்மை நீங்கி, குடிநீராக மாறியது.

குடிக்கும் நீரின் நச்சு தன்மையை, என்.டி.யூ., எனும், “நிபிலோமெட்ரிக் டர்பிடிட்டி யூனிட்’ என்ற அலகால் அழைக்கிறோம்.

குடிக்கும் நீரின் நச்சு தன்மை, 1என்.டி.யூ., விற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு லிட்டர் நீரில், 1 மி.கி., சோடியம் குளோரைடு கலவையை சேர்த்து, அதில் இம்மூன்று விதைகளின் பொடியையும் போட்டு, 10 நிமிடங்கள் ஊறியவுடன், அடியில் தேங்கிய கலவையை, 200 மில்லி நீருக்கு, 0.5 கிராம் கலந்து, 12 மணி நேரம் வைக்க வேண்டும்.

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் வேதிபொருட்களை முருங்கை விதை, அழித்தது. தேத்தாங்கொட்டை, கன உலோகங்களை பிரித்தது. அவரை விதை, நீரின் கலங்கல் தன்மையை நீக்கியது.

இந்த இயற்கையான தொழில்நுட்பத்தால், நச்சு தன்மை உள்ள நீர், 98 சதவீதம் தூய்மையாகி, குடிநீராக மாறுகிறது.

தொழில் ரீதியிலான செயற்கை முறைகளை விட, மூன்று விதைகளை பயன்படுத்தி, ஆய்வில் கண்டுபிடித்த, இயற்கையான இப்புதிய தொழில்நுட்பம், மிகவும் பாதுகாப்பானது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories