பனங்கிழங்கு மாவு புட்டு
தேவையான பொருட்கள்
அரிசி 90 கிராம், பனங்கிழங்கு மாவு 10 கிராம், வெல்லம் 5 கிராம்,
செய்முறை
அரிசி மற்றும் பனங்கிழங்கு மாவில் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த மாவை 20 முதல் 25 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.
வேக வைத்த மாவுடன் சிறிதளவு வெல்லம் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சூடாக பராமரிக்கலாம். விலையும் சற்று கூடுதலாக கிடைக்கும்
முட்டை பஞ்சு கேக்
முட்டை 3 ,சர்க்கரை 120 கிராம், வெண்ணெய் 60 கிராம், மைதா 120 கிராம் ,சமையல் சோடா ஒரு சிட்டிகை, சூடான தண்ணீர் தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை எஸ்என்ஸ் சில துளிகள்.
செய்முறை
முட்டையை எஸ்என்ஸ் உடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும். மைதா மாவை சலித்து அதனுடன் உப்பு சமையல் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மைதாவுடன் வெண்ணெய் சர்க்கரை தண்ணீர் மற்றும் கலக்கிய முட்டையை சேர்க்கவும்.
இதையேகேக் அச்சில் ஊற்றி 167 முதல் 1900 cல் 20 நிமிடம் சமைக்க வேண்டும்.