ஊடுபயிர் சாகுபடி
முதன்மை பயிருடன் பிற பயிர்களை கலந்து சாகுபடி செய்யும் முறையை ஊடுபயிர் சாகுபடி.
ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம்பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும் மேலும் கால்நடைகளுக்கு வறட்சிக் காலங்களில் தீவனத்தை உற்பத்தி செய்யலாம்.
நிலக்கடலை சோளம் துவரை போன்ற பயிர்களில் இன்னொருத்தியுடன் பயறுவகை பயிர்கள் அவரை கொத்தவரை பயிர்களையும் தட்டைப் பயிறு அவரை போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
நுனி கிள்ளுதல்
அதிக வளர்ச்சியை கட்டுப்படுத்தி வீணாகும் சத்துக்களை காய்கறிக்கு கிடைக்கச் செய்வதே நுனி கிள்ளுதல் எனப்படும்.
பொதுவாக துவரை பருத்தி போன்ற பயிர்களை நுனி கிள்ளுதல் முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாவதுடன் காய்களின் எடை அதிகரிக்கின்றது.