உங்கள் மாமரத்தில் நுனிக்கருகல் நோய் பாதிப்பு உள்ளது.
நோயின் அறிகுறிகள்
🍂நோய் தாக்கிய மரத்தின் நுனிகள் முதலில் கருகி விடும்.
🍂நோயுற்ற மரத்தின் கிளை நுனி அல்லது தளிர் இலைகள் கருகி காய்ந்து விடும்.
🍂நோய் தீவிரமாகும் போது நுனியிலிருந்து
நோய் கீழ் நோக்கி பரவும்.
🍂 பூக்கள் அதிகளவு உதிர்ந்து விடும்.
🍂நோயினால் பாதிக்கப்பட்ட மரப்பட்டை அல்லது கிளைகளில் கறுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
🍂அவையாவும் பூசணத்தின் வித்து திரள்களேயாகும். இவற்றிலிருந்து எண்ணற்ற பூசண வித்துக்கள் உற்பத்தியாகின்றன.
🍂 இவை காற்றின் மூலம் பரவுகின்றன. இந்நோய், செடி முதல் மரம் வரை அனைத்து வயது மரங்களையும் தாக்கும்.
🍂 மழை காலம் தொடங்கியுள்ளதால் நோய் தீவிரமாக பரவி வருகிறது. நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் கட்டுப்படுத்துதல் அவசியம்.
தீர்வு:
🍂மரங்களின் அடிப்பகுதியில் கவாத்து செய்வதால் மட்டும் நோயை கட்டுப்படுத்த இயலாது.
🍂எனவே இந்நோய் தோன்றும் பொழுதே பின் நோக்கி காயும் குச்சிகளை பச்சையம் உள்ள இடம் வரை கவாத்து செய்து, அப்பகுதியில் சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் பசையை தடவ வேண்டும்.
🍂ஒரு லிட்டர் தண்ணீரில் முறையில் தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் 30ML (3%) இரண்டு முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
அல்லது
முறையாக தயாரிக்கப்பட்ட போர்டோ கலவை (Bordeaux mixture)
(1%) இரண்டு முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
உங்கள் மாமரத்தில் உள்ள பூஞ்சாணங்கள் பாதிப்பு பாதிப்பை எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.
நன்றி
P.சத்தீஸ்குமார் குடியேற்றம் …