உயிராற்றல் வேளாண்மை முறையில் என் சாகுபடி :

உயிராற்றல் வேளாண்மை முறையில் என் சாகுபடி :

இரகங்கள் :

எள் அந்த ஊருக்கே உகந்த நாட்டு ரகம் அல்லது மேம்படுத்தப்பட்ட பல்கலைக்கழக இரகங்கள் சாகுபடிக்கு தேர்வு செய்துகொள்ளலாம்.

பருவம்:

மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை மாதங்கள் சிறந்தவை. இறவைப் பயிராக பயிரிட மாசி மாதங்கள் ஏற்றவை.

மண்:

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் மண்ணின் வளம் அல்லது அங்கக கரிமம் சீராக இருக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். (அதேபோல் கடைசி உழவுக்கு முன் நாள் மாலை உயிராற்றல் வேளாண்மையின் இடு பொருட்களான சாண மூலிகை உரம் 1 கிலோ + கொம்பு சாண உரம் 100 கிராம் 16 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மணி நேரம் இடம் வலமாக சுற்றி வீரிய படுத்தி கரைசல் வயல் முழுக்க பெருந்துணையாக விழும்படி தெளித்துவிட்டு மறுநாள் உழவு ஓட்ட வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்க அதிகரித்து மண் வளத்திற்கும் பயிர் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.) சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழவேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரம் 2டன் அளவிற்கு (அ) மக்கிய தொழு உரமாக இருந்தால் 10 டன் போடவேண்டும். அதேபோல் சாம்பல் அல்லது எள்ளு புண்ணாக்கு உங்களால் இயன்ற அளவு பயன்படுத்த வேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவிற்கு படுக்கை தயாரிக்கவேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும்.

விதையளவு:

மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படும். இறவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ விதை தேவைப்படும்.

விதைநேர்த்தி:

விதை நேர்த்தி செய்ய – 3 கிலோ எள் க்கு 1/2 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து வைத்து விதைக்கலாம்.

அல்லது

சூடோமோனஸ் 200 கிராம் அல்லது விரிடி 200 அல்லது விதைகளை சேர்க்க வேண்டும். வடித்த கஞ்சியை ஆற வைத்து, அதில் விதைக்கலவையைச் சேர்க்க வேண்டும். ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுத்து விதைத்தால் வேரழுகல் மாதிரியான நோய்கள் தாக்காது. நன்றாக முளைக்கவும் செய்யும்.
விதைத்தல் 20 கிலோ மணல் அல்லது 20 கிலோ எருவுடன் எள் விதையைக் கலந்து விதைப்பது நல்லது. அப்போதுதான் சரியான இடைவெளியில் விதைகள் விழுந்து முளைக்கும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்:

எள்ளைப் பொறுத்தவரை தண்ணீர் அதிகமாகத் தேவைப்படாது. செடியை வாடவிட்டு தண்ணீர் கட்டினால், இலை குறைந்து காய் அதிகமாகக் காய்க்கும்.

வளர்ச்சி ஊக்கிகள் :

ஒவ்வொரு முறை தண்ணீர் பாய்ச்சும்போதும் 200 லிட்டர் உயிராற்றல் வேளாண்மையின் இடு பொருட்களான சாண மூலிகை உரம் 1 கிலோ + கொம்பு சாண உரம் 100 கிராம் ஒரு மணி நேரம் இடம் வலமாக சுற்றி வீரிய படுத்தி கரைசல் அல்லது 100 லிட்டர் ஜீவாமிர்தம் தண்ணீரில் கலந்து விடவேண்டும்.

எள்ளை விதைநேர்த்தி செய்து இதுபோன்ற கரைசலையும் கொடுப்பதால், எள்ளில் அதிகமாக தாக்குதல் நடத்தும் மாவுப் பூச்சிகளின் தாக்குதல் குறைந்துவிடும்.

15 முதல் 20 நாட்கள் ஒருமுறை ஏதோ ஒரு இலைவழி வளர்ச்சி ஊக்கியாக உயிராற்றல் வேளாண்மையின் இடு பொருட்களான சாண மூலிகை உரம் 1 கிலோ + கொம்பு சாண உரம் 100 கிராம் 100 லிட்டர் ஒரு மணி நேரம் இடம் வலமாக சுற்றி வீரிய படுத்தி கரைசல் தெளிக்கலாம் அல்லது மீன் அமிலம் , முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் தெளிக்கலாம்.

எள் பூவெடுக்கும் ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் தேமோர் கரைசல் அல்லது கொம்பு சிலிக்கா உரம் தெளித்தால் பூக்கள் பூக்கும் திறன் அதிகரிக்கும் மற்றும் பூகள் உதிர்வது குறையும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்
விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் முதல் களை எடுக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முறையும் களை எடுப்பதற்கு முன்னால் உயிராற்றல் வேளாண்மையின் இடு பொருட்களான சாண மூலிகை உரம் 1 கிலோ + கொம்பு சாண உரம் 100 கிராம் 16 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மணி நேரம் இடம் வலமாக சுற்றி வீரிய படுத்தி கரைசல் வயல் முழுக்க பெருந்துணையாக விழும்படி தெளித்துவிட்டு மறுநாள் கலை எடுக்கவும். கூடவே, அதிகப்படியாக உள்ள செடிகளை அகற்றவேண்டும். முதல் களை எடுத்ததிலிருந்து 15 நாட்கள் விட்டு அடுத்த களை எடுக்கவேண்டும். 40 நாட்களானதும் செடி வளர்ந்து நிழல் அடைத்துக் கொள்ளும். எனவே, மேற்கொண்ட களைகள் அவ்வளவாக வளராது.

பயிர் பாதுகாப்பு
புழுக்கள் மற்றும் ஈக்கள்

புழுக்கள் மற்றும் எள் ஈயினைக் கட்டுப்படுத்த மூலிகை பூச்சி விரட்டி அல்லது உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளான பவேரியா பேசியானா புழுக்களுக்கும், வெர்டிசிலியம் லெக்கானி ஈளை கட்டுப்படுத்தவும் தெளிக்க வேண்டும்.

பயிர்களை முறையாக கவனித்து பஞ்சகவ்யம் நல்லது வேப்பங்கொட்டை சாறு கரைசலை தெளிப்பதன் மூலம் பூஞ்சாண நோய்கள் இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களை எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

வேரழுகல் நோயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் (அ) டிரைக்கோடெர்மா விரிடி உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 30ம் நாள் மண்ணில் இடலாம் அல்லது செடிக்கு அருகில் ஊற்ற வேண்டும்.

70-ம் நாள் முதல் செடிகளில் காய்கள் குலுங்கத் தொடங்கும். இந்த சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகம் இருக்கும். இரண்டு முறை அக்னி அஸ்திரம் தெளித்தால், இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

சில நேரங்களில், சாம்பல் நோயும் தாக்கலாம். இந்நோய் தாக்கிய செடிகளின் தண்டுகள் பழுத்து, பாதியாக ஒடிந்து விழும். இதைத்தடுக்க முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும்.

அறுவடை:

85 நாட்களுக்கு மேல் செடியில் இலைகள் உதிர்ந்துடும். இந்த நிலையில், செடியின் நுனிப்பகுதியில் இருக்கும் காய்களை உடைத்துப் பார்க்கவேண்டும். விதை பழுப்பு நிறத்தில் இருந்தால், செடியை அறுவடை செய்யலாம்.

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …

முக்கிய குறிப்பு :

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டியின் படி உழவுப் பணி மேற்கொள்ள மற்றும் கலை எடுக்கும் பணி மேற்கொள்ள மற்றும் நீர் வழி வளர்ச்சி ஊக்கிகள் கொடுக்க கீழ்நோக்கு நாளில் வரும் (வேர்) மண்ணுக்கு உண்டான அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முன் உள்ள 48 மணி நேரம் நாளை பயன்படுத்திக் கொள்ளவும்.

அதேபோல் விதைகள் விதைக்க மற்றும் இலைவழி வளர்ச்சி ஊக்கி கொடுக்க மேல்நோக்கு நாள் வரும் (விதை,பழம்) கான நாள் அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முன் உள்ள 48 மணி நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கொம்பு சிலிக்கா உரம் தெளிக்க பௌர்ணமி நாள் அல்லது மேல்நோக்கு நாள் வரும் (விதை,பழம்) கான நாள் அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முன் உள்ள 48 மணி நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories