ஒர் எச்சரிக்கை பதிவு

ஒர் எச்சரிக்கை பதிவு

கடந்த புதன்கிழமை… இரவு ஒன்பது மணி அளவில் காரில் வரும்பொழுது வெள்ளெருக்கு செடி பார்த்தேன்..
அதன் பூக்கள் எனக்கு தேவைப்பட்டதால் பூக்களைப் பறித்துக் கொண்டேன் எருக்கம் பால் ஒரு துளி விரல்களில் பட்டிருந்தது… துடைத்து விட்டேன்..

வீட்டுக்கு வந்து சுமார் அரை மணிநேரம் கழித்த பிறகு எதேச்சையாக எனது விரல் கண்களில் பட லேசாக எரிந்தது..

அலர்ஜியாக இருக்குமோ என்ற நினைப்பில் அந்த விரலால் மேலும் கண்களை தேய்க்க எரிச்சல் அதிகரித்தது..

ஒரு கட்டத்தில் ஏதோ விபரீதமாக நடந்து கொண்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது அப்போதுதான் எனக்கு எருக்கம்பால் கையில் பட்டது நினைவுக்கு வந்தது.

கண்கள் சிவந்தது.. தண்ணீரில் அலசினேன் எரிச்சல் குறைந்தது…

உடன் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினாலும்.. கொ ரோனா காலத்தில் திருத்துறைப்பூண்டியில் மருத்துவரைப் பார்ப்பது கடினம் என்பதால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்..

காலை மூன்று மணிக்கு எழுந்த போது.. வலது கண்ணில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன்… பார்வை .. மங்கியது ..

அதிர்ந்தேன்.. முகம் பார்க்கும் கண்ணாடியில் இடது கண்ணை மறைத்தபடி வலது கண்ணால் பார்த்தால் எனது உருவம் தெரியவில்லை..

பார்வை இழந்து விட்டது என்ற நினைப்பே எனக்கு கலக்கத்தை கொடுத்தது.. உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன்..

மறு நாள் புதுமனை புகுவிழா.. இப்படி ஆகிவிட்டது… எல்லோரும் உற்சாகமாக இருக்கும்போது எனக்கு ஒரு கண் பார்வை தெரியவில்லை என்பதை எப்படிச் சொல்வது..

பொழுது விடிந்த பிறகு

அருகே இருந்த டூவீலரில் பதிவு எண்ணை படிக்க முடியவில்லை…

காலை பதினோரு மணிக்கு திருத்துறைப்பூண்டி கண் மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன்.. பரிசோதித்துவிட்டு கண்ணின் கருவிழி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.. கசக்கி போட்ட காகிதம் போல இருக்கிறது என்றார்…..

வலது கண்ணால் எதிரே இருக்கும் எழுத்துக்களை படிக்கச் சொன்னார்..எனக்கு எழுத்துக்கள் இருப்பதே தெரியவில்லை என்றேன்..
பார்வை தற்காலிகமாக போயிருக்கிறது

பயப்பட வேண்டாம் 10நாளில் பார்வை திரும்பி விடும் என்றார் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்… அடிக்கடி போட்டேன்..
இரண்டு நாளில் 100% பார்வை திரும்பியது…

எருக்கன் செடியின் பால் விரல்களில் பட்டு கண்ணில் வைத்ததற்கு இந்த நிலை என்றால்…

நேரடியாக கண்ணில் பட்டு இருந்தால்பார்வை இழப்பு தவிர்க்க இயலாது போயிருக்கும்

ஆசிரியர்கள் தங்கள் பள்ளிச் சிறுவர்களை எருக்கஞ்செடி பக்கம் செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்…

எருக்கன் செடியின் பால் பற்றி எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories