களைகளால் ஏற்படும் பாதிப்புகள்:

களைகளால் ஏற்படும் பாதிப்புகள்:

பயிர்களோடு போட்டியிட்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி மற்றும் நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து கொண்டு பயிர் மகசூலைக் குறைக்கிறது. பல்லாண்டுக் களைகள் நிலத்தின் மதிப்பைக் குறைக்கின்றன. களை விதைகள் கலப்பதால் விளைபொருட்களின் தரம் மற்றும் மதிப்பு குறைகிறது. களைகள் பூச்சி மற்றும் நோய்களுக்கு மாற்று ஊன் வழங்கிகளாக இருப்பதால், தொடர்ந்து பயிர் பாதுகாப்பு மேற்கொள்வதால் உற்பத்தி செலவு கூடுகிறது. களைகளால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் நச்சுத்தன்மையால் மனிதன் மற்றும் கால்நடைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் வாழும் களைகள் பாசன வழிகளை அடைப்பதுடன் தண்ணீரையும் விரயமாக்குகிறது. களைகள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து கிரகித்துக் கொள்வதால் மண்ணின் ஊட்டத்திறன் குறைகிறது.

களைகள் பரவும் முறைகள்:

🍁விதைகள் மூலம் பரவுதல்.

🍁உழவு சாதனங்கள்.

🍁நீர் மூலமாக பரவுதல்.

🍁தொழு உரம் மூலமாக பரவுதல்

🍁பறவைகள் மூலம் பரவுதல்.

🍁பறவைகள் மூலம் பரவுதல்.

🍁காற்று மூலம் பரவுதல்.

ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு:

🍁 கோடை உழவு:
கோடை மழை பெய்தவுடன் உழவை மேற்கொண்டு பல்லாண்டுக் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இதனால் களைகளின் வேர்கள் மற்றும் கிழங்குகள் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு சூரிய ஒளி பட்டு அழிந்துவிடும். மண்ணின் நீர் பிடிப்புத்திறனும் மேம்படுத்தப்படுகிறது.

🍁 பயிர் இடைவெளி பராமரித்தல்:
சிபாரிசு செய்யப்பட்ட பயிர் இடைவெளியை பராமரிப்பதால், களைகளின் தாக்கம் குறையும் என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

🍁 பயிர் சுழற்சி:
ஒரு பயிரைத் தொடர்ந்து பயிரிடுவதால் சில களைகள் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி விளைச்சலைக் குறைக்கும். எனவே, பயிர் சுழற்சியை பின்பற்றி களைகளின் தொடர் பாதிப்பினை குறைக்கலாம்.

🍁 ஊடுபயிர் சாகுபடி
அதிக பயிர் இடைவெளியுள்ள பயிர்களில் வரிசைகளுக்கு இடையே ஊடுபயிர் பயிரிட்டு களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 நிலமூடாக்கு:
பயிர்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் பயிர்களின் கழிவுகள் கொண்டு நிலமூடாக்கு செய்வதால் சூரிய ஒளி இல்லாமல் களை விதைகள் முளைப்பது தடைபடுகிறது.

🍁 போட்டிப் பயிர்கள்

போட்டிப் பயிர்கள் அல்லது எதிரி பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் களையை மிகவும் எளிமையாக கட்டுப்படுத்தலாம்
உ.ம். சூரியகாந்தி, மக்காச்சோளம், சோளம், கொள்ளு போன்ற பயிர்களை சாகுபடி செய்யும்போது களைகள் கட்டுப்படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மிகவும் எளிமையாக களைகளை கட்டுப்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். இது ஏற்கனவே களைகள் குறித்து நான் படித்த கட்டுரை + அனுபவம் ஆகும்.

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம்…

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories