கவாத்து செய்வதன் முக்கியத்துவம்
🎍கவாத்து என்பது அதிகமாக உள்ள பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குப்படுத்தும் முறையாகும்.
🎍இதை செய்வதன் மூலம் புதிதாக கிளைகள் மற்றும் பூ மொட்டுகளை துளிர்க்கச்செய்ய முடியும்.
🎍இதனால் அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை தருவிக்க முடியும்.
🎍பொதுவாக கவாத்து செய்யவில்லை என்றால் மரம், செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
🎍கவாத்து செய்வதன் மூலம் அதிகப்படியான மகசூலும் முழுமையாக கிடைக்கின்றன.
கவாத்து செய்வது எப்படி?
🎍கவாத்து பூவெடுக்கும் தருணங்களில் பார்த்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மரம் பட்டு போக வாய்ப்பு உள்ளது.
🎍செப்டம்பர் மாதத்தில் கவாத்து முக்கியம்.
🎍முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
🎍அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.
🎍கவாத்து செய்தவுடன் வெட்டுப்பாகத்தில் சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் கலவை அல்லது பசுஞ்சாணத்தைத் தடவி வைக்க வேண்டும்.
அல்லது
முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம்(3%) அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ்(3%) அல்லது போர்டாக்ஸ் கலவை (1%) கவாத்து செய்த மரம் முழுக்க நனையும்படி தெளித்து விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் கவாத்து செய்யும் பொழுது பரவக்கூடிய பூஞ்சான நோய்களை எளிமையாக கட்டுப்படுத்தலாம்.
🎍முறையாக கவாத்து இல்லாத மரங்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்.
🎍மரத்தின் வயது, தாங்கும் திறன், ரகம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு கவாத்து செய்ய வேண்டும்.
எப்போது கவாத்து செய்யக்கூடாது?
🎍மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் போது செய்யக்கூடாது.
🎍போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது.
🎍பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது.
🎍பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. ஏனெனில் அப்படி செய்யும் போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.
🎍கவாத்து செய்யும் போது அதிக கிளைகளை வெட்டி விடக்கூடாது.
நன்மைகள் :
🎍கவாத்து செய்வதினால் தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துகளையும் வீணாக்காமல் பயிர்களுக்கு அளிக்கமுடிகிறது.
🎍அதனால் செடி மற்றும் மரங்களிடையே நல்ல காற்றோட்ட வசதி ஏற்படுகிறது.
🎍இதை செய்வதன் மூலம் மகரந்த சேர்க்கை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெற்று மகசூல் அதிகரிக்கப்படும்.
🎍கவாத்து செய்யப்பட்டு நீக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை நாம் மக்க வைத்து இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.
🎍ஏனெனில் ஒரு மரம் அல்லது செடி தனக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அதன் பாகங்களில் சேகரித்து வைத்திருக்கும்.
🎍நாம் கவாத்து செய்யப்பட்ட கிளை மற்றும் இலைகளை அப்புறப்படுத்தினால் ஊட்டச்சத்துக்கள் வீணாகும் நிலை ஏற்படும்.
கவாத்து செய்ய தேவையான கருவி :
கவாத்து செய்வதற்கான கத்திரிக்கோல்கள் மற்றும் அறுக்கும் வாழ் மற்றும் கூர்மையான சுத்தமான கத்தி மற்றும் கவாத்து இயந்திரம் போன்றவை எளிமையாக கடைகளில் கிடைக்கின்றன. இவற்றினை கொண்டு முறையாக கவாத்து மேற்கொள்ளலாம்.
மே – ஜூன், டிசம்பர் – ஜனவரி ஆகிய பருவங்கள் சாகுபடிக்கு சிறந்தவை.
நன்றி P.சத்தீஸ்குமார் குடியேற்றம் …