தண்டு அழுகல் நோய்

நிலக்கடலை தண்டு அழுகல் நோய்
(ஸ்கிளிரோசியம் ரோல்ப்சி)

அறிகுறிகள் :

இது ஒரு பூசணத்தால் உண்டாவது. தாக்குதல் அதிகமாகும்போது கரும்பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

தண்டுப் பகுதியில் வெள்ளை நிற நூல் இழை போன்று தோன்றும். பயிரின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாகி வாடி விழுந்துவிடும்.

வளர்ந்த பயிர்களும் தாக்குதலுக்கு உண்டாகும். கீறல்கள் மண்ணினுள் இருக்கும் தண்டு பாகத்தில் தோன்றி கிளைகளுக்கும் மேல் பக்கமாக பரவும்.

கழுத்துப்பகுதியில் இருந்து மடிந்த மற்றும் இறந்த கிளைகள் வெகு சுலபமாக விழுந்துவிடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள் :

ஏக்கருக்கு 3 கிலோ வைரல் பேஸ்ட் + 200 லிட்டர் தண்ணீர் + 15 கிலோ புதியதாக போட்ட நாட்டு மாட்டு சாணம் நன்கு கரைத்து தூர் பகுதியில் ஊற்றிவிட்டால் எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

அல்லது

டிரைகோடெர்மா விரிடி 3 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம். அல்லது
3 கிலோ டிரைகோடெர்மா விரிடி 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்றி விடலாம்.

கூடவே ஏக்கருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டால் கூடுதல் பலன் + கூடுதல் கட்டுப்பாடு கிடைக்கும்

 

 

நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் தாக்குதல் உள்ளது.

இந்த நோய் பயிரின் அனைத்து வளர்ச்சி காலங்களிலும் வரக்கூடியது.

நோயின் ஆரம்ப கட்டத்தில் தண்டு பகுதிக்கு மேல் செம்பழுப்பு நிறத்தில் நீர் கோர்த்தது போல புள்ளிகளை காணலாம்.

நாளடைவில் இந்த புள்ளிகள் தண்டுக்கு கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் பரவும்.

எனவே செடிகள் வாட ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்ட செடிகளின் வேர்கள் அழுகி அதை பிடுங்கும் போது மிக எளிதில் வரும்.

இந்த நோயானது விதை மற்றும் மண் மூலம் பரவக்கூடியது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள் :

ஏக்கருக்கு 3 கிலோ வைரல் பேஸ்ட் + 200 லிட்டர் தண்ணீர் + 15 கிலோ புதியதாக போட்ட நாட்டு மாட்டு சாணம் நன்கு கரைத்து தூர் பகுதியில் ஊற்றிவிட்டால் வேர் அழுகல் நோய் எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

அல்லது

டிரைகோடெர்மா விரிடி 3 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம். அல்லது
3 கிலோ டிரைகோடெர்மா விரிடி 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்றி ஊற்றினால் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

மிளகாய்ச் செடியில் பாதித்துள்ள நோய் வாடல் நோய் புசேரியம் சோலானி, நெக்ட்டிரியா ஹேமடோகோக்கா ஆகிய பூசணங்களால் உண்டாக்குகிறது.

செடியின் எவ்வித வளர்ச்சி பருவத்திலும் இந்நோயின் பாதிப்பு ஏற்படலாம்.

மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஈரத்தன்மை குறையும் பொழுது, கோடைகாலங்களில் நீர்ப்பாசனம் இல்லாமல் மண் இறுகி விடுவதாலும் இந்நோய் தீவிரமடைகிறது.

தோட்டத்தில் தாக்கப்பட்ட செடிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாடத்துவங்கும்.

இந்நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் வெளிர்பச்சை நிறமடைந்து கீழ்நோக்கி தொங்கும்.

தாக்கப்பட்ட செடிகளின் மேல் நுனி இலைகள் தளர்ந்து வாடி சரியாக நீர்ப்பாய்ச்சாதது போல் தோற்றமளிக்கும் இந்நோய் தாக்கி முதலில் வாடும் செடிகளின் முதலில் வேர்களில் எவ்வித மாற்றமும் செடிகளின் தண்டுபகுதிகளை நீள்வாட்டில் வெட்டினால் உள்ளே திசுக்கள் பழுப்பு நிறமாக மாறியிருப்பதைக் காணலாம்.

வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை

சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் எனும் பயிர் ஊக்கி பாக்டீரியாவை 2 கிலோவை ஐம்பது கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து தூர் பகுதியில் தூவிவிட்டு நீர் பாய்ச்சவும் அல்லது தண்ணீரில் கரைத்து தூர் பகுதியில் ஊற்றி விடவும் இவ்வாறு செய்தால் மிகவும் எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

அல்லது

ஏக்கருக்கு 3 கிலோ வைரல் பேஸ்ட் + 200 லிட்டர் தண்ணீர் + 15 கிலோ புதியதாக போட்ட நாட்டு மாட்டு சாணம் நன்கு கரைத்து தூர் பகுதியில் ஊற்றிவிட்டால் வேர் அழுகல் நோய் எளிமையாக கட்டுப்படுத்திவிடலாம்.

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories