நுட்பத்தையும் , ஒற்றை நாற்று நடவு நுட்பத்தையும் கலந்துகட்டி தாளடி பட்டத்துல நம்ம அறல் கழனியில் நெல் நடவு செஞ்சிருக்கோம் !!
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
ஏக்கருக்கு 25கி விதை எப்பொழுதும் போல அடர்த்தியாக நாற்றங்காலில் பாவினேன், அதை 20 நாளில் நாற்று எடுத்தோம் !! தோராயமா ஏக்கருக்கு 1300 முடிச்சு வந்துச்சு..
இதுவே SRI முறை நடவு என்றால் 60-100 முடிச்சே அதிகம்!!
நாளு கிழம எல்லா பாக்காம சூரியன் வணங்கிட்டு நெல்லு நாற்ற சாமியா கும்மிட்டு , தென்கிழக்கு மூலையில முதல் நடவு புடிச்சு தாளடி சாகுபடிய ஆரம்பிச்சோம்!!!
நடவு முறை :
அடியுரமாக மாட்டு எரு மற்றும் எள்ளு புண்ணாக்கு கொடுத்து,
எப்பொழுதம் மூன்று சால் உழவு செய்வேன் , இப்போ இரண்டு சால் மட்டுமே உழுதேன் (தாளடி பயிர் சீக்கிரம் பச்சை பிடிக்க வேண்டும் அதனால்) , இரண்டாவது சால் உழும் பொழுதே டிரக்டர் உதவி கொண்டே பிரம்பு அடித்தேன்!! அண்டை வெட்டவில்லை!!
இதுவெல்லாம் செலவுகள் குறைக்கும் நோக்கோடு செய்யப்பட்டது!!
ஆனால் இவ்வளவு செலவுகள் குறைத்தாலும் நடவு கூலி போன முறையை விட ₹100 ஏற்றிவிட்டார்கள்!! என்ன செய்ய?? 🤔
(100 நாள் வேலை கூலி உயர்வு எதிரொலி)
SRI முறையில கயிறு பிடிச்சு, பாரம்பரிய முறையில 5-10 நாற்று வச்சு நடவு செய்யதோம்!!
முதல் கட்ட நடவில் பாரம்பரிய நெல்களான கருங்குருவை, அறுபதாம் குருவையும் , பல்கலைக்கழக இரகமான அம்பை 16 இட்லி அரிசி நெல்லும் நடவு செய்திருக்கின்றேன்!!!
20 நாளில் நாற்று அடர்த்தியாக விட்டும் எப்படி இவ்வளவு உயரம் வளர்ந்தது என்று அனைவரும் கேட்டனர்!! மாட்டு எரு தான் போட்டேன்!! எரு போட்டால் களை வரும் என்றார்கள்!! நாற்று விட்டு 10 நாள் கழித்தே போட்டேன்.. அதனால் களை வளர்வதற்குள் பிடிங்கிவிட்டோம்!!
மொத்தம் 5.5 ஏக்கர் நடவு செய்துள்ளோம்
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
இந்த நடவு முறையின் பயன்கள்:
1) இரண்டாம் போகம் என்பதால் பயிர் சீக்கிரம் தூர் வெடிக்காது அதனால் அடர்த்தியாக நடும் பொழுது மகசூல் இழப்பு தவிற்கப்படும்.
2) நாற்று அடர்த்தியாக விடும் பொழுது எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.. ! நடவு முறையில் ஒரு சில வகையில் செலவு குறைகிறது…
3) SRI முறையில் கயிறு பிடித்து நடுவதால் கோனாவீடர் ஓட்டலாம்.. அதனால் பயிர் தூர் வெடிப்பது அதிகமாகிறது!!
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
இன்னும் இரண்டு ஏக்கர் நடவு பாக்கி உள்ளது அதில் (R&D) சோதனை முறையில் அடர் நடவில் எவ்வளவு மகசூல் வருகிறது என்று பார்ப்பதற்காக மைசூர்மல்லி மற்றும் பூங்கார் நெல்களை நடவு செய்ய இருக்கின்றேன்!!
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
விவசாயம் மட்டுமே தினம் தினம் ஒரு பாடத்தை கற்று கொடுக்கிறது!!!
இயற்கை வழியில் இயன்ற வேளாண்மை செய்வோம்
-உழவர் வ.சதிஸ்,
அறல் கழனி,
கோட்டப்பூண்டி,
மேல்மலையனூர்,
8940462759