முறையாக மரக்கன்றுகள் நடவு செய்யும் வழிமுறைகள் :-
🍁 ஒரு குழியின் அளவு 2 அடி அகலம் 2 அடி நீளம் 3 அடி ஆழம் குழி எடுக்க வேண்டும். இந்த அளவு அவரவர் மண் வாகைப் பொறுத்து கூறியது.
🍁 குழி எடுக்கும் பொழுதே வயலின் சத்தான மேல் மண்ணை தனியாகவும் அடி மண்ணை தனியாகவும் வைத்துக் கொள்ளவும். குழி எடுத்து முடித்த பிறகு குறைந்தது 15 நாட்கள் ஆற விட வேண்டும்.
🍁 மரங்கள் நடுவதற்கு உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டியின் படி கீழ்நோக்கு நாளில் வரும் (விதை,பழம்) அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முன் உள்ள நாற்பத்தி எட்டு மணி நேரம் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
🍁நாளைக்காலை மரக்கன்றுகள் நடவு செய்கிறார்கள் என்றால் இன்று மாலையே வயலின் சத்தான மேல் மண்ணுடன் + ஒரு கூடை அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரம் இரண்டையும் நன்கு கலந்து குறி முழுக்க நிரப்பி விடுங்கள். பின்பு குழி நிறையும் அளவிற்கு நீர் பிடித்து விட்டுவிடுங்கள்.
🍁 மறுநாள் காலை செடி நடும் பொழுது குழியில் இருக்கும் வெப்பம் முழுக்க வெளியேறி இருக்கும். மரக்கன்றுகள் நடவுக்கு உகந்த நிலையில் தயாராக இருக்கும். பிறகு அந்தக் மரக்கன்று வைக்குமளவுக்கு கைகளால் மண்ணைப் பறித்து. வயலின் மட்டத்தில் கன்று வரும்படி வைத்து மண்மூடி மரக்கன்றுகளை சுற்றி நன்கு மிதித்து விட வேண்டும்.
🍁இவ்வாறு மரக் கன்றுகள் நடவுக்கு முன்போ அல்லது பின்போ அந்த மரக்கன்று முழுக்க நனையும்படி முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் அல்லது உயிராற்றல் வேளாண்மை இடு பொருட்களான சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் கரைசலில் அன்று முழுக்க நனையும்படி குளிப்பாட்டி விடுங்கள். இதன் மூலம் அந்த செடிக்கு இருக்கும் அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.
🍁 மரக்கன்று நடவு செய்த அன்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்கும் பொழுது முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் அல்லது உயிராற்றல் வேளாண்மை இடு பொருட்களான சாண மூலிகை உரம் + கொம்பு சாண உரம் கரைசல் கலந்து கொடுக்கவும்.
🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக கடைபிடித்தால் போதும் உங்களது மரக்கன்றுகள் அற்புதமான வளர்ச்சியும் + ஆரோக்கியம் + திடகாத்திரமாக வளரும்.
நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …