விதை நேர்த்தி செய்வதன் அவசியம் (அ) பயன்கள் :

விதை நேர்த்தி செய்வதன் அவசியம் (அ) பயன்கள் :

நெல்:

மண்ணின் மூலம் பரவக்கூடிய வேர் அழுகல், நாற்று அழுகல், வாடல் நோய், இலைவழி பரவும் குலைநோய், இலையுறை கருகல், இலைப்புள்ளி, ஆந்த்ராக்னோஸ் நோய் பாதிப்பை குறைப்பதில் உயிராற்றல் வேளாண்மையயின் இடுபொருட்களான சாண மூலிகை உரம் மற்றும் கொம்பு சாண உரம் கரைசல் அல்லது முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் அல்லது சூடோமோனஸ் அல்லது டி.விரிடி இவற்றின் பங்கு அதிகம். நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான் பாதிப்பை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் சாணம் மூலிகை உரம் + 10 கிராம் கொம்பு சாண உரம் அல்லது 30 ML பஞ்சகவ்யம் அல்லது 30 ML சூடோமோனஸ் அல்லது 10 கிராம் டி.விரிடி இதில் ஏதோ ஒன்றை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு தேவையான விதை நெல்லை தேர்வு செய்துகொண்டு அதை ஒரு கோணிச் சாக்கில் போட்டு கட்டி அந்த மூட்டை முழுக்க நனையும்படி நீரில் மூழ்கி வைக்க வேண்டும். மூழ்கி வைக்கும் நீரில் (தொட்டி, பிளாஸ்டிக் பேரல்) மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு நுண்ணுயிர் கரைசலை அதில் கலந்து வைத்துவிட வேண்டும். இதன் மூலம் அந்த நுண்ணுயிர் கரைசல் விதைகள் முழுமையும் நனைந்து விதை நேர்த்தி ஆகிறது.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.
இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைகளை நிழலில் நன்றாக உலர்த்திய பின்பே விதைக்க வேண்டும்.

இவ்வாறு இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நாற்றுகள் நன்றாக வாளிப்பாக வளரும். அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்பு காணப்படும். பயிர்கள் நன்றாக வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பெறும், பூச்சிகள், நோய் தாக்குதல்கள் இருக்காது.

நன்றி
P.சத்தீஸ் குமார் குடியேற்றம் …

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories