விவசாயம் செய்ய நிலம் அவசியமில்லை, உரம் அவசியமில்லை,

விவசாயம் செய்ய நிலம் அவசியமில்லை, உரம் அவசியமில்லை, தடபெப்பம் அவசியமில்லை, பூச்சிகொல்லி மருந்து அவசியமில்லை, ஆட்கள் அவசியமில்லை..கடும் குளிர் நிலவும் பகுதியிலும், பாலைவனத்திலும் விவசாயம் செய்து நல்ல லாபம் எடுக்கலாம்…

எதுக்கு இப்படி அதிர்ச்சி அடைகிறீர்கள்? இது எல்லாம் உண்மைதான் என நெதர்லாந்து நிருபித்து காட்டியுள்ளது

நெதர்லாந்து…தமிழக நிலபப்ரப்பில் 25% மட்டுமே இருக்கும் நாடு. உலகின் விவசாய ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கிறது என சொன்னால் அதிர்ச்சி அடைவோம். ஆனால் அது உண்மை. முதலாமிடம் அமெரிக்கா, இரண்டாமிடம் நெதர்லாந்து

எப்படி இந்த சாதனையை நிகழ்த்துகிறார்கள்?

எல்லாமே க்ரீன் ஹவுஸ் எனப்படும் பசுமைக்குடில் விவசாயம் தான். மிகப்பெரிய பசுமைக்குடில்களில் தக்காளி, உருளை, கீரைகள், முட்டைக்கோஸ் மாதிரி காய்களை ஹைட்ராபோனிக்ஸ் முறையில் வளர்ப்பார்கள்.

அதாவது பெரிய நீளமான தண்ணீர் தொட்டிகள்., அதனுள் மீன் வளர்ப்பார்கள். அதன்மேல் ஸ்டைரோபார்ம் அல்லது பிளாஸ்டிக்கில் ஓட்டை போட்டு செடிகளை வளர்ப்பார்கள். வேர்கள் நீருக்குள் இருக்கும்.

நீரில் இருக்கும் மீனின் கழிவில் இருக்கும் அம்மோனியா, நைட்ரேட் எல்லாம் இயற்கை உரமாகும். செடிகள் அதே சமயம் நீரை சுத்தமும் செய்துவிடும். கிட்டதட்ட 100% மழைநீர் மட்டுமே சேகரிக்கபட்டு பயனாகிறது,. துளி தண்ணீர் வீணாவது கிடையாது. செடிகள் எத்தனை நீரை உறிஞ்சுகிறதோ அதுமட்டும் தான். சராசரி விவசாயத்தை விட 90% அளாவு குறைவான நீர் மட்டுமே தேவைபப்டுகிறது. தண்ணீர் பம்புகள் முலம் தேங்காமல் தொடர்ந்து நகர்ந்துகொன்டே இருக்கும்.

மின்சாரமும் பசுமைக்குடில் மேல் இருக்கும் சோலார் பேனல்களில் இருந்து பெறப்படுகிறது. மகரந்த சேர்க்கை செயற்கை முறையில் விவசாயிகளால் நடக்கும். அல்ட்ரா வயலட் விளக்குகள் மூலம் சூரிய ஒளியில் இருக்கும் அல்ட்ராவயலட் கதிர்கள் பசுமைக்குடிலில் குளிர்காலத்தில் உருவாக்கபடுகின்றன. பசுமைக்குடில் என்பதால் பூச்சிகள் எதுவும் வருவது இல்லை. பூச்சிகொல்லி அவசியம் இல்லை.

ஆக முழுமையான ஆர்கானிக், மீன் வளர்ப்பில் வரும் காசு, காய்கறி விற்பனை, ஒரு பெரிய அளவிலான பண்ணையை கவனிக்க மூன்றே பேர் போதும்…என விவசாயத்தில் சாதனை செய்கிறது நெதர்லாந்து

இதனால் சீசன், பருவநிலை, மண், வெயில், குளிர்..எதைப்பற்றியும் கவலையின்றி விவசாயம் நடக்கிறது. பாலைவனபகுதிகளில் சூரிய வெளிச்சம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கே கூட சோலார் மின்சாரம் எடுத்து இதை செய்யலாம் என்கின்றனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள்.

ஒரு குட்டி நாட்டால் விவசாயத்தில் இத்தனை சாதனை செய்யமுடிகிறது என்பதை எல்லாம் விட வரும்காலத்தில் உலகம் முழுக்க இப்படி பசுமைக்குடில் மூலம் மிகப்பெரிய அளவில் விவசாய புரட்சியும், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பும் நடக்கும், பொருளாதார வளமையும், உடல்நலனும் மேம்படும் என்கின்றனர் நிபுனர்கள்.

~ நியாண்டர் செல்வன்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories