🍆🥕 “காய்கறி” குறள்.

🍆🥕 “காய்கறி” குறள்.

“தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.”

🍅🌰🥑🥝🍈🍇🥦

“எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே.”

🍓🍒🥑🥝🥥🥦🌶

“வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.”

🍅🥒🍄🌶🥒🥥🍉

“பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை.”

🍄🌶🍊🍉🥥🥦

“தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்.”

🍄🥦🥒🍏🍍🥕🌶

“வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்.”

🍄🥑🍉🍈🍇🌶

“வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு.”

🍅🍌🍄🥒🌶🍎

“கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்.”

🌽🌰🍄🥝🥥🍈🍇

“பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்.”

🍅🍌🍋🍊🍉🥝🥦

:காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.”

🥥🍈🍉🍄🥦🥒🌶

“முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்.”

🍑🍅🌰🥝🥥🍉🍌

“காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.”

🌽🍍🍊🍉🥝🥒🥦

“இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை.”

🌰🥔🍒🍑🍐🍏🥦

“உரிக்க உரிக்கத் தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உண்ணவிடில்.”

🥔🍓🍐🥥🍎🍍🥦

“பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்.”

🍅🍋🍌🍍🍆🥦🥒

“பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்.”

🍊🍉🥥🥝🥒🌶

“வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை”

🍍🍐🍓🍇🥦🥒

“வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேனெவே எண்ணு பவர்.”

🍓🥦🌶🥥🍏🍉

“கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை”

🍋🍊🍉🍈🍆🍄

“பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை.”

🍑🍐🍎🌽🥕🌶

“கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்.”

🍅🍍🍉🍈🍇🥦

“கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.”

🥕🍒🍑🍐🍏

“பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்.”

🍉🍒🍋🍌🍍🥑

“கண் இருந்தும் குருடரே காசினியில் காய்கறியை உண்ணாதவர்.”

🙏🍄🥔🍒🍊🍏🥦🙏🙏🙏🙏🙏

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories