5 வருடங்களுக்கு மேல் இயற்கை வழி விவசாயத்தில் பயணித்து கொண்டு இருக்கின்றேன்!!

5 வருடங்களுக்கு மேல் இயற்கை வழி விவசாயத்தில் பயணித்து கொண்டு இருக்கின்றேன்!!

இதுவரையிலும் பாரம்பரிய இரகங்களை பரவலாக்குவதே என் பணியாக உள்ளது!!

நிறைய விசயத்திற்கு பொதுப்பார்வை அடிப்படையில் நானும் எதிர்த்துள்ளேன்!!

இங்கு நிறைய சர்ச்சைக்குரிய விசயங்களை பேசும் பொழுது கைகலப்பாகும் அளவு விவாதம் நடக்கிறது

ஆனால் அதை விடுத்து ஆரோக்கியமான விவாதமாகவும் தீர்வுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்…

என்னுடைய சந்தேகங்களை விவாதமாகவே வைக்கின்றேன்!!

நாம் பயன்படுத்தும் பல தானிய (உளுந்தி, பச்சை பயிர், கேழ்வரகு, கடலை) வகைகள்.. பலவும் பல்கலை ரகமாக மட்டுமே உள்ளது

மாட்டுக்கு தரகூடிய தீவன புற்கள் பலவும் பல்களை இரகங்கள் தான் கோ fs29, super napier, வேலி மசால் etc.

இதே குழுவில் பல முறை கதிரி நிலக்கடலை பற்றி பேசியுள்ளோம்..

அப்பொழுதெல்லாம் வராத எதிர்பு நெல் ரகத்தை பேசும் பொழுது மட்டும் ஏன் வருகிறது?

ஏனென்றால் நாம் பரவலாக பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுத்துவிட்டோம் என்பதே…

சொல்லப்போனால் இத்தனை நெல் வகைகளையும் பாரம்பரியமாக பாதுகாத்து வைத்த அந்த முதல்குடி விவசாயிக்கு இந்த பெருமை போய் சேர வேண்டும்

மீட்டெடுத்த பாரம்பரிய இரகத்தை நாம் தவறவிடகூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அறிவியலையும், பல்கலைகழக அறிவையும் நாம் புறந்தள்ள முடியாது என்பதே உண்மை…

**********

இங்கு விளைவிக்கபடும் பல பயிர்கள் நமது நாட்டு பூர்வீக பயிர்கள் இல்லை!!

எ.கா;

🍅 தக்காளி ,
முள்ளங்கி,
பீன்ஸ், கோஸ், கேரட்,
முக்கியமாக மிளகாய் காலிபிளவர்,
தேயிலை,
காபி, கோகோ இன்னும் பல!! இதில் பல காய்கறிகள் Peru , Africa, china ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது! இவைகள் நம் நாட்டிற்கு வந்து 300 ஆண்டுக்குள் தான் ஆகின்றது!!

அதை போய் நாம் நாட்டு தக்காளி , நாட்டு மிளகாய் என்று கூறுவதே தவறாகும்

கரும்பு நமது நாட்டு பயிரே இல்லை!! அது கிழக்காசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது!! நமது பண்டைய சோழ மன்னர்கள் அதை கொண்டுவது தமிழகத்தில் பரவலாக்கினர்!!

வரலாறு தொட்டே பாரம்பரிய நெல்லில் ஒட்டு வைப்பதும், அதில் உள்ள மருத்துவக்குணங்களை ஆராய்ந்துமே வந்துள்ளனர் நம் முன்னோர்கள்!!

இவ்வளவு ஏன்

இன்று நாம் நாட்டு மாங்கனிகள் (மாங்கனி பூரவீகம் தென்தமிழகம் தான்) என்று கூறும் இமாம்பசந்த், மங்கனப்பள்ளி, செந்தூரா போன்ற பல மாங்கனிகள் முகலாயர்கள் காலத்து அரசர்களால் அதன் சுவைக்காக ஒட்டு வைக்கப்பட்டு உருவக்கப்படவையே!!

சொல்லப்போனால் இவைகள் இல்லாமல் இன்று நம் சமையலரையே இல்லை!! (மிளகாய் , தக்காளி, கேரட், பீன்ஸ்)

மிளகை மட்டுமே காரமாக வைத்து சாம்பாரும், இரசமும் வைத்தால் கூட்டும், பொரியலும் வைத்தால் எத்தனை பேர் சாப்பிடுவார்கள்??? என்பதே கேள்விக்குறி அள்ளவா!!

அப்பொழுது நமது பாரம்பரிய உணவுகள் பலவற்றை நாம் மறந்து விட்டோம்!!

இவ்வளவு ஏன் ஒரு சில நூற்றாண்டுகாளக தான் இட்லி நமது உணவுப்பட்டியலில் சேர்ந்தது என்றால் நம்ப முடியுமா!! ஆனால் உண்மை அதுவே!!

வரலாறுகள் தொட்டே விவசாய விதைகளில் இயற்கையாகுவும் செயற்கையாக மனிதர்களாலும் ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டு கொண்டே தான் உள்ளது!!

பண்டைய நமது தமிழர் நாகரீகத்திலும் விவாசய அறிவியலில் சிறந்து விளங்கினர் என்பதற்கு உதாரணமே நம் பாரம்பரிய இரகங்களின் வகைபாடுகள் ஆகும்!!

நாம் அறிவியலை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் SRI நடவும், டிராக்டர், பெட்ரோல் , டீசல் எதுவுமே இல்லாமல் மாடுகளை கொண்டு மட்டுமே மனித சக்தியால் மட்டுமே இன்று விவசாயம் சாத்தியமா??

ஆனால் மரபணு மாற்றம் என்பது அறம் சார்ந்த அறிவியல் இல்லை

அதே போல நமது பாரம்பரிய நெல்களை ஒட்டு படுத்தி உருவாக்கவும் வேண்டியதில்லை என்பதே எனது நிலைபாடு

மேலும் நாம் பாரம்பரிய இரகங்களின் மருத்துவ குணங்கள் பற்றி பேசுகின்றோம்!!

ஆனால் அத்தனை நெல்களின் அரிசிகளையும் lab test செய்து அதன் மருத்துவ குணங்களை ஆவணபடுத்தவில்லை எனில் எதிர்கால சந்ததிகளே நம்மை பார்த்து கேள்வி கேட்கும்

எனது வீட்டில் 60% நாட்டு காய்கறிகள் மட்டுமே உண்கிறோம்! *ஆங்கில காய்கறிகள் முற்றிலும் தவிர்த்துவிட்டோம் இல்லை என்றால் எங்கள் தோட்டத்து காய்கறிகள் மட்டுமே உண்கின்றோம்!!

இவையெல்லாம் என் மனதில் தோன்றியது!!

இன்னும் பல கேள்விகள் உள்ளது!!

நமது பழக்கமே ஒருவரை தலைவராகவோ அல்லது ஒரு கொள்கையோ பின்பற்றிவிட்டோம் என்றால் அந்த பார்வையிலிருந்து விலகவே மாட்டோம்! அந்த கருத்து தான் சரி என்ற நிலைப்பாடு நம் மனநிலையாக இருக்கும்!!

ஆனால் அதைவிடுத்து வெளியே பார்த்தால் தான் மற்ற நிலைப்பாடுகள் புரியும்!! எது சரி , எது தவறு என்ற கேள்வி வரும்..

அறிவியலும் அவ்வாறே!!

எல்லாவற்றையும் பகுத்தறிந்து செயல்படுவோம்

நான் கூறிய *

-உழவன் வ.சதிஸ்.,
அறல் கழனி,
8940462759

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories