விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூபாய் 2 கோடி வரை உத்தரவாத கடன்!

 

விவசாயிகளுக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியத்துடன் ரூபாய் 2 கோடி வரை உத்தரவாதத்துடன் கடன் வசதி பெறும் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது அதை பற்றி இங்கு காணலாம்.

இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் குழுவாக இணைந்து இயந்திர வாடகை மையம் சூரியசக்தி மோட்டார் இயற்கை இடுபொருள் நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கடன் வசதி அளிக்கப்படும்.

ரூபாய் 2 கோடி வரை உத்தரவாதம் கடன்

இந்த திட்டத்தின் அதிகபட்சமாக ரூபாய் 2 கோடி வரை கடன் பெற முடியும். வங்கிகள் விதிக்கும் வட்டி7 ஆண்டு காலத்திற்கு மூன்று சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படும் .2 கோடிக்கு மேல் கடன் பெறாமல். ரூபாய் 2 கோடிக்கு மட்டும் 3% வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரூபாய் 5 கோடி வரை உள்ள கடன்களுக்கான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

கடன் பெற தகுதியுடையோர்

விவசாயிகளின் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சுய உதவிக் குழுக்கள் கூட்டுப் பொருட்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விற்பனை கூட்டுறவு சங்கங்கள் வேளாண் தொழில் முனைவோர் மாநில முகமைகள் மற்றும் வேளாண் விளைபொருட்கள் விற்பனை குடும்பங்கள் முகமது மற்றும் வேளாண் விளைபொருட்கள் விற்பனை குடும்பங்கள் தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு சுய உதவிக் குழுக்கள் கூட்டமைப்புகள் ஆகியன கடனுதவி பெற இயலும்.

இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனுக்காக வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 9 சதவீதம் மட்டுமே ஆகும்.

தமிழகத்தின் இலக்கு

தமிழகத்தில் 2032-33 ஆண்டுவிரைவில் ரூபாய் 5 ஆயிரத்து 990 கோடி அளவுக்கு கடன் வசதி தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories