விஷமில்லா மாடித் தோட்டக் காய்கறிகள்……

ஆனை விலை, குதிரை விலைன்னு ஏறிக்கிட்டே இருக்கே காய்கறிகளோட விலை. கிராமமா இருந்தா, நாமே தோட்டத்துல போட்டு எடுத்துடலாம். இங்க 750 சதுர அடியில குடியிருக்கிறோம். இதுல செடி, கொடிகளை எப்படி வளர்க்கிறது என்று குழம்ப வேண்டாம் இதோ தீர்வு.

முருங்கை மரம், அவரைப் பந்தல், தக்காளிச் செடி என்று அடர்ந்த தோட்டத்தையே மொட்டை மாடியில் உருவாக்கலாம்.

இயற்கை முறையில் செடிகள் வளர்க்க ஆரம்பியுங்கள். வீட்டு மொட்டைமாடியிலேயே தோட்டம் போடலாம்.

காலிச் சாக்குகளை தயார் பண்ணி, அதில் தோட்டத்து மண்ணை நிரப்பி தக்காளி, வெண்டை, கத்திரினு வைத்தால் எல்லாமே நல்லா வரும். அதுக்கப்பறம் அவரை, பூசணி, பாகற்காய்,வாழை, மாதுளை, முருங்கைனு வெக்கலாம். எல்லாமே செழிப்பாவே வளரும்.

மாடி மண்ணை மாத்த வேண்டிய அவசியமே இல்லை. மண்ணுக்குத் தேவையான சத்துக்களை மட்டும் கொடுத்துட்டு வந்தா போதும், நல்ல விளைச்சல் கிடைக்கும். மாடியில் மரங்களை வெச்சா வேர் பரவி தளத்துக்கு பாதிப்பு ஏற்படுமானு பயப்படவேண்டாம். நீர்க் கசிவே இருக்காது. அதிகமா வேர் விடுற ஆலமரத்தையும், அரச மரத்தையும் வெச்சாதான் பிரச்சனை.

சென்னை மாதிரி நெருக்கடி மிகுந்த நகரங்களில் வசிக்கிறவங்களுக்கு அறுநூறு சதுர அடியில் மாடி இருந்தா போதும். ஒரு குடும்பத்தின் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நாமே தோட்டத்துல போட்டு எடுத்துக்கலாம். அதுவும் விஷமில்லாமல்!

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories