செடிகளை நேரடியாக தொட்டிகளில் பலர் வளர்க்கின்றனர். அவ்வாறு தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் போது முறையான பராமரிப்பு அளிக்க வேண்டும் அதைப் பற்றி இங்கு காணலாம்.
மாடித்தோட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, தொட்டிகளில் செடி வளர்ப்பதினால் விளைச்சலில் எந்த பாதிப்பும் இருக்காது.
தொட்டிகளில் வளர்க்கும் செடிகளுக்கு தினந்தோறும் தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்தல் வேண்டும். மேலும் தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வடிவதற்கு துளைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் தினந்தோறும் ஊற்றுவதால் நீர் வடியாமல் இருந்தாலும் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
தரையில் வளரும் தாவரங்கள் தனக்கு வேண்டிய சத்துக்களை தனது வேரினை கொண்டு பிற தாவரங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் .ஆனால் தொட்டியில் வளர்க்கும் செடிகளுக்கு நாம்தான் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க வேண்டும் .தண்ணீர் ஊற்றும் போது அதனுடன் ஏதேனும் ஒரு வளர்ச்சி ஊக்கியை அளிக்கவேண்டும்.
தொட்டியில் உள்ள மண் இறுகி போகாமல் இருக்கவும் முதலிலேயே அதாவது தொட்டியில் மண்ணை நிரம்பும்போது இலை தழைகள் ,தேங்காய் நார், போன்றவற்றை அதனுடன் கலந்து வைக்க வேண்டும். இதனால் மண் இறுக்காமல் இருக்கும் .மேலும் தொட்டியில் சில மண்புழு விட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.
மாதம் ஒருமுறை இச்செடியை சுற்றிலும் தொட்டியின் உயரத்தில் பாதியளவு வரை சிறு சிறு துளையிட்டு தொழுஉரம் அல்லது மக்கிய இலைகளை நிரப்பவேண்டும். தொட்டியின் மேல் பகுதியில் இலைகளை மூடாக்காக போட்டு வைக்கலாம்.