தேவையான பொருட்கள்
grow bags அல்லது தொட்டி
அடியுரமாக இட மணல், தென்னைநார் கழிவு, மண்புழு உரம், பஞ்சகாவியா, செம்மண்.
விதைகள்
பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இதற்கு தொட்டி அல்லது பை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார் கழிவு ,ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றைக் கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கிழங்கு வகை என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்கவேண்டும். அப்பொழுதுதான் கிழங்கு வளர ரொம்ப எளிதாக இருக்கும் . மணல் இறுகி போகும் பிரச்சனை இருக்காது.
விதைத்தல்
முள்ளங்கியை நேரடியாகவும் நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.பிறகு தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
காய்கறி கழிவுகளில் டீத்தூள்,முட்டை ஓடு ஆகியவற்றை மட்க செய்து உரமாக போடலாம்.
பஞ்சகாவியா 10 மில்லியை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகளும்
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பம் தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
அறுவடை
முள்ளங்கி முளைத்து இரண்டு மாதத்திலேயே அறுவடைக்கு வந்துவிடும். இதன் கிழங்குகள் சற்று மேலேயே தெரிவதால் சரியான பருவம் பார்த்து அறுவடை செய்யவேண்டும்.