வெயிலை சமாளிக்க உணவு பழக்கங்களை மாற்றங்களை செய்வது போல வீட்டிற்க்குள் குளிர்ச்சி தரும் சிறு தாவரங்களை வளர்க்கும் இந்த கோடை வெயிலை சமாளிக்கலாம்.
சீன மூங்கில்
சீன மூங்கில் தாவரம் பார்ப்பதற்கு மூங்கிலை போலவே காட்சிதரும் .ஆனால் மூங்கிலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இந்தசீன மூங்கில் வீட்டுல வைத்திருக்க அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என கருதப்படுகிறது. அதனால் இதற்கு அதிர்ஷ்டம் மூங்கில் என்ற பெயரும் உண்டு.
சைக்கோ கோனியம் பிங்க்
குரோட்டன் என்ற செடியை போன்று காணப்படுகிறது. இது மண்ணில் வளரக் கூடியதாகும் .மேலும் இதற்கு நேரடியாக அதிக சூரிய வெளிச்சம் தேவை இல்லை. இதன் இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
ஜேடு பிளான்ட்
இந்த செடியின் இலைகள் தடிமனாக இருக்கும். இந்த செடியின் மண்ணில் வளரும் தன்மை கொண்டது. இதற்கு நேரடியான வெளிச்சம் தேவை இல்லை. இதை வீடுகுலே வளர்க்கலாம்.
பீஸ் லில்லி
இந்தசெடி அழகான தோற்றத்துடன் வெள்ளை நிறத்தில் வளரக்கூடியது. இதனால் இது அமைதி லில்லி எனவும் அழைக்கப்படுகிறது இந்த செடியை தொட்டியில் வளர்க்கலாம்.
மணி பிளான்ட்
இது வீட்டிலுள்ள காற்றை சுத்தமாகும் வெறும் தண்ணீரில் வளரக்கூடிய தன்மை கொண்டது.