உங்கள் வீட்டுத் தோட்டங்களை நீங்கள் சரியாக பராமரிக்கிறீர்களா? தெரிஞ்சுக்குங்க..

** வீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது ஒரு கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல.

** செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன.

** தோட்டத்தில் உள்ள செடிகளைக் குழந்தைகளைப் போலப் பராமரிக்க வேண்டும். அவற்றில் பூச்சி தொற்று ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து விட வேண்டும்.

** குறிப்பாகப் பல வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் செம்பருத்திச் செடிகளில் ‘மீலி பெக்’ என்ற பஞ்சு பூச்சி தாக்குதல் இருக்கும். இது பார்ப்பதற்கு வெள்ளை பொடி போல இருக்கும்.

** இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாக எடுத்துக் கொண்டு, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து பூந்தூரலாய் ஸ்பிரே செய்ய வேண்டும்.

** இந்தச் சிறிய ஸ்பிரே தோட்டப் பொருள்கள் விற்கப்படும் கடைகளில் கிடைக்கும்.

** பொதுவாகக் குளிர் காலத்தில் செடிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விட்டால் போதும். வாரம் ஒரு முறையேனும் செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

** மனிதனுக்கு நடைப்பயிற்சி போலக் கொத்திவிடுவதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனைச் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதால் பயன் ஒன்றும் இல்லை.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories