தொட்டியில் விதை போட்டு வைப்பார்கள் அதற்கு பயன்படுத்தும் தொட்டியானது சிறியதாக இருந்தால் அதில் விதைக்க கூடாது . மண்ணில் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பது தவிர்க்க வேண்டும்.
மண்ணின் தன்மைக்கேற்ப பலன்கொடுக்கும் விதைகளை வைக்க வேண்டும்,
விதைக்கும் போது விதைகளை மிக மிக அருகில் வைக்கக்கூடாது.
ஆழமாக விதைக்கக் கூடாது .விதைமண்ணில் மூடி இருந்தால் போதும்.
விதைத்த பிறகு நீர் அதிகமாக ஊற்றக்கூடாது. விதை மட்கி தான் முளைக்கும். அதிக ஈரம்இருந்தால் முளைக்காது.
கீரை விதையை தூவி விட்டு மண்ணை கிளறி விட வேண்டும்.
பிறகு மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும்.
இதன்மூலம் விதையும் மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும் .மண்ணில் கீரை விதை விதைத்த பிறகு நீரைத் தெளித்து விட வேண்டும்.
தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்கக்கூடாது.