வீட்டிலேயே இயற்கை விவசாயம் செய்தல்

சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வீட்டு மாடி, காலி இடங்களில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டத்தில் காய்கறி வளர்க்கலாம்.
இதற்கு 2,650 ரூபாய் செலவாகும்.
அதில், 50 சதவீதம் மானியம் போக, மீதமுள்ள தொகையை மக்கள் செலுத்தினால் போதும்.
பாலித்தீன் கவர் 20, தென்னை நார் கழிவு, விதை, இயற்கை உரம் என, 15 வகையான பொருட்கள் வழங்கப்படும்.
தென்னை நார் கழிவுடன், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் இயற்கை உரத்தை கலந்து, ஒரு வாரத்துக்கு தண்ணீர் தெளித்து மட்க செய்ய வேண்டும்.
அதன்பின், விதைப்பு செய்ய வேண்டும் என்றார்’
.
செடி வளர்ந்ததும், ஒவ்வொரு பாலித்தீன் பையிலும் மட்கிய நார் கழிவை நிரப்பி, செடியை நடவு செய்ய வேண்டும்.
தினமும் தண்ணீர் தெளித்து பராமரித்தால் போதும் என்றார் .
பூச்சி, புழு தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் கலவையை ‘ஸ்பிரே’ செய்ய வேண்டும்.
ரசாயன மருந்தில்லாமல், காய்கறியை இயற்கையாக விளைவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தில் வீட்டு மொட்டை மாடியிலும் விவசாயம் செய்யலாம்.
திட்டம் குறித்த, மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை, நெ.8, தடாகம் ரோடு, கோவை என்ற முகவரியிலும், 04222453578 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories