வீட்டிலேயே வெந்தயகீரையை எளிதாக வளர்க்கலாம்.

வீட்டிலேயே வெந்தயகீரையை எளிதாக வளர்க்கலாம்.

வீட்டு தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்க்கு பிறகு எளிதாக வளர்க்க கூடிய கீரை வகை. வெந்தயத்திலும் வெந்தய கீரையிலும் இருக்கும் சத்துக்கள் சொல்லி மாளாது. சத்துக்கள் நிரம்பிய கீரையை எந்த பூச்சி கொல்லி மருந்துகளும் இல்லாமல் இயற்கை முறைப்படி வளர்த்தால் தானே அதன் சத்துக்கள் நம்மை முழுமையாக சென்றடையும்.
எப்படி வளர்ப்பது என்று படி படியாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
a)வெந்தயம் – 50 முதல் 100 கிராம் (நீங்கள் வளர்க்க பயன்படுத்தும் pot டை பொருத்தது.
b)ஒரு pot – அகலமாக இருந்தால் நல்லது.
1) வெந்தயத்தை 8 -12 மணி நேரம் நன்றாக நீரில் ஊற வைத்து கொள்ளவும்.
2) பின் நீரை வடித்து துணியிலோ hot pack க்கிலோ போட்டு மூடி 8-12 மணி நேரம் நன்றாக முளை கட்டி கொள்ளவும்.
3) இப்போது உங்கள் விதைகள் தயார். நீங்கள் வளர்க்க போகும் தொட்டியின் உயரம் 5-6 இன்ச்களாவது இருக்க வேண்டும். நடவேண்டிய தொட்டியில் மண்ணை நிரப்பி கொள்ளுங்கள்.பின் வெந்தயத்தை நன்றாக பரப்பி தூவி விடுங்கள்.விதைகளை நெருக்கமாக தூவ வேண்டும்.
4) பின் மேலே மண்ணை தூவி மூடுங்கள்.லேசாக விதைகள் மறையும் அளவு தூவினால் போதுமானது.
5) நீரை தெளித்தால் போதும்.ஊற்ற வேண்டாம்.தொட்டியில் எப்போதும் ஈர பதம் இருக்க வேண்டும்.கவனம்: ஈரப்பதம் …ஈரமாக அல்ல.தண்ணீர் அதிகம் விட்டால் விதைகள் அழுகி விடும். படத்தில் இருப்பது வளர்ந்து 7 நாட்கள் ஆன கீரை தளிர்கள்.
6)நேரடியாக சூரியனுக்கு கீழே வைக்க கூடாது.சூரிய வெளிச்சம் இருக்கும் இடமே போதுமானது..அடியில் சூடான கம்பி கொண்டு நீர் வெளியேற துளைகள் இடுக.
7) முழுதாக அறுவடை செய்ய ஒரு மாதம் ஆகும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories