வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம் சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.

வீட்டுத் தோட்டம் அமைத்தல்
வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், நமது அன்றாட தேவைக்கான காய்கறிகள், கீரைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இன்று விவசாயத்திற்கு , பல வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்களை பயன்படுத்துகிறோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பது நமக்கே தெரியாது. இயற்கையான முறையில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், இயற்கை முறையில், சத்து நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ளலாம்.
விதைகள் என்று பார்த்தால் . நாட்டு விதைகளில் வரும் செடிகள் பொதுவாய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாய் இருக்கும். நீண்ட காலம் பலன் தரும். அடுத்த பருவத்திற்கு அதில் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்ளலாம். வருடா வருடம் விதை வாங்க வேண்டியதில்லை.
முதலில் கொஞ்சம் வெயில் அதிகம் படும் இடமாகத் தேர்வு செய்யுங்கள். எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.
வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி நாற்று போட்டு நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள் பரப்பி ஒரு 10 செ. மீ. வளர்ந்த பின் சிறிய இடைவெளி விட்டுப் பிடுங்கி நட்டுவிடலாம். ஒவ்வொரு காய்கறிக்கும் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்
பொதுவாகக் கீரையை எடுத்துக் கொள்வோம். 25 முதல் 30 நாளில் வீட்டுத் தோட்டத்தில் கீரைதயார். கீரை விதைகளை விதைக்கும்போது கவனம் தேவை.எறும்புகள் தொல்லை தரும். அடியுரமாக நன்கு மக்கிய கம்போஸ்ட் உரங்களை (இயற்கை உரம்) இடுங்கள். தேவைப்பட்டால் கடலைப் பிண்ணாக்கு + வேப்பம் பிண்ணாக்கு கலந்து இடலாம் . பூச்சித் தொல்லை இருப்பின் வேப்ப எண்ணெய் பஞ்சகவ்யா தெளிக்கலாம். கசப்பு தன்மை உடைய இலைகளை வேகவைத்து சாறு எடுத்து அதில் கோமியம் அதேஅளவு கலந்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடிக்கலாம் இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நலம்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் காய்கறிகள் இயற்கையானதும் நச்சுத் தன்மையற்றது. தினமும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள பைபர் நார்ச்சத்து நம் ஜீரண சக்திக்கு மிகவும் அவசியம். சராசரியாக தினமும் 300 கிராம் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories