வீட்டு தோட்டத்தில் பீட்ரூட் பயிரிடும் முறை

 

மாடித் தோட்டம் பீட்ரூட் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் பீட்ரூட் பயிரிடும் முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
 1. Grow Bags அல்லது Thotti
 2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
 3. விதைகள்
 4. பூவாளி தெளிப்பான்
 5. பசுமைக்குடில் அமைப்பதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

கிழங்கு எளிதாக வளரவும், மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக சேர்க்க வேண்டும்.

விதைத்தல்

விதைகளை நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

உரங்கள்

சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

பசுமை குடில்கள் அமைப்பதற்கு வரிசையாக நீளக்கம்பிகளை இருபுறமும் வளைத்து அதன் மேல் பாலிதீன் பைகளை இணைத்து கட்ட வேண்டும். அதனை திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளலாம். பசுமைக்குடில் அமைப்பதற்கான பிரத்தியேக சாதனங்களை கொண்டும் பசுமை குடில்களை நிறுவி விடலாம்.

இக்குடிலுக்கு சீதோஷண நிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை இருப்பதால் பருவகால மாற்றங்கள் செடிகளின் வளர்ச்சியை பாதிப்பது இல்லை. செடிகளை பாதிக்கும் முக்கிய பிரச்சனையான பூச்சிகளின் ஆதிக்கம் பசுமைக் குடிலுக்குள் காணப்படுவதில்லை.

இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

அறுவடை

விதைத்த 60 முதல் 70 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பீட்ரூட் பயன்கள்:
 • பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன.
 • பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
 • கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும் தன்மை கொண்டது.
 • தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
 • சோர்வு, தளர்ச்சி போன்ற உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து புத்துணர்ச்சி பெற பீட்ரூட் சீரான முறையில் உதவுகிறது.
 • பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் கலந்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகும்.
 • பீட்ரூட்டை பச்சையாக உண்பதன் மூலம் நம் உடலில் இருக்கும் செல்களுக்குப் போதுமான அளவு ஃபோலிக் அமிலத்தின் சத்து கிடைக்கிறது.
 • மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள், மற்றும் வாந்தி, பேதி போன்ற உணவு மண்டல கோளாறுகளுக்கு பீட்ரூட் நல்ல பலன் தரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories