வீட்டுத் தோட்டங்களில் மல்லிகை முல்லை போன்ற செடிகளை வளர்த்தால் வருடத்தில் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை பூக்கும்.
இதனால் நாம் தோட்டத்திற்குள் நுழையும் போது அந்தப் பூக்களில் இருந்து வரும் நறுமணத்தால் நம் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஆமணக்கு எந்த மாதத்தில் நடவு செய்யலாம்?
ஆமணக்கு மானாவாரி நிலங்களிலும் வறட்சியான பகுதிகளிலும் ,வரப்புப் பயிராகவும் ,ஊடுபயிராகவும் ,முதன்மை பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பயிரிடப்பட்டு வருகிறது.
ஆமணக்கை ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் பயிரிடலாம். அந்த வகையில் மானாவாரியாக ஜூன் ஜூலையில் இறவைப் பயிராக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பெயரிடலாம்
நொதித்த ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி?
5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் தண்ணீருடன் கலந்து மண்பானை அல்லது தொட்டிகளில் ஊற்றி பத்து நாளைக்கு மூடி வைக்க வேண்டும்.
பிறகு 10 நாட்கள் கழித்து இந்த கலவையிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் உள்ளதுஅல்லது வாசனை தோன்றும்.
பிறகு இந்த கலவையை எடுத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
எப்போதெல்லாம் கவாத்து செய்யக்கூடாது?
மரம் அல்லது செடி நோய் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கும் போது கவாத்து செய்யக்கூடாது.
போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் கவாத்து செய்யக்கூடாது.
பருவ காலங்களில் பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது.
பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு கவாத்து செய்யக்கூடாது. ஏனெனில் அப்படி செய்யும்போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்து விடும்.
கவாத்து செய்யும்போது அதிக கிளைகளை வெட்டி விட கூடாது.
மடியானது சில மா டுகளில் முன்பகுதி இறக்கவும்,சில மாடுகளை பின்பகுதி இறக்கமாகவும் இருக்கிறது. பொதுவாக மடி எப்படி இருக்க வேண்டும்?
மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும். பால் மடியானது நன்றாக விரிந்து உடலோடு ஒட்டி காணப்படவேண்டும். மடி தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது .நான்கு காம்புகளும் சீராக இருக்க வேண்டும்.