கொடைக்கானலில் கருப்பு கேரட் விளைச்சல் ! விவசாயிகளின் புதிய முயற்ச்சி!

பொதுவாக கேரட்டுகள் (Carret) ஆரஞ்சு வண்ணத்தில் தான் பார்த்திருப்போம். ஆனால், கருப்பு வண்ண கேரட்டும் (Black Carret) தமிழகத்தில் பரவலாக பயிரிடப்படுகிறது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய காய்கறி தான் கேரட். கொடைக்கானலில் (Kodaikanal) கருப்பு வண்ணத்திலான கேரட்டை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை செய்துள்ளார்.

கருப்பு கேரட்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேந்த ஆசீர் (Ashir) என்ற விவசாயி மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை (Carret seed) வாங்கி தன் 5 சென்ட் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கருப்பு கேரட்டை பயிரிட்டார். வழக்கமான ஆரஞ்சு கேரட்டை (Orange Carret) போலவே இந்த கருப்பு கேரட்டுகள் 90 நாட்கள் பயிர் தான். சீனாதான் இந்த கேரட்டின் பூர்வீகம் என்று சொல்லப்படுகிறது. இனிப்புடன் லைட்டாக காரம் கலந்து சுவையுடன் இந்த கேரட் இருக்கும் என்றார்

அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்கள்
பொதுவாகவே , கேரட்டுகள் குறைந்த கலோரிகள் (Low Calories) உடைய காய்கறியாகும். அதிகளவு நார்ச்சத்துக்கள் (Fiber), வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைச்துள்ளதாக இருக்கும். மற்ற கேரட்டுகளை விட கருப்பு கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் (Anti-Oxidants) உள்ளது. 100 கிராம் கருப்பு கேரட் சாப்பிட்டால் அதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது 36 கலோரிகள் மட்டுமே. உடல் எடையை குறைக்க (Weight loss) விரும்புபவர்கள் தங்கள் உணவில் கருப்பு கேரட்டை சேர்த்துக் கொள்ளவது நல்லது. மற்ற கேரட்டுகளை விட அதிக சுவை கொண்ட கேரட்டாகும். கருப்பு கேரட்டில் அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமி அதிகமாக இருப்பதோவே அதன் வண்ணம் கருப்பாக உள்ளது என்றார்.

கருப்பு கேரட்டின் நன்மைகள்:

கருப்பு கேரட்டில் நார்ச்சத்து அதிகம். இதனால், செரிமான உறுப்புகள் வலு பெறும். வாயுத்தொல்லை, மலச்சிக்கல் , வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வராமல் கருப்பு கேரட் தடுக்கிறது. கருப்பு கேரட் உண்டால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அதிகரிக்கும். மனிதர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரீயாக்கள் (Bacterias) மற்றும் வைரஸ்களை (Virus) எதிர்த்து போராடக் கூடிய கூடிய திறன் கருப்பு கேரட்டுக்கு உள்ளது. இதில், வைட்டமின் சி (Vitamin C) சத்து அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் திறம்பட செயல்பட உதவி செய்கிறது எனவே,

வெள்ளை அணுக்கள் நன்றாக செயல்பட்டால் தான் நோய்க் கிருமிகளிடமிருந்து மனித உடலை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும். கருப்பு கேரட்டில் இருக்கும் அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமியால் புற்றுநோய் செல்களை (Cancer cells) எதிர்த்து உடல் போராட முடியும். பார்வைத்திறனை அதிகரக்கவும் கருப்பு கேரட் உதவுகிறது. கருப்பு கேரட்டை ஜூஸாக எடுத்துக் கொள்வதும் நல்லது. என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories