பீட்ரூட் அறுவடைத் துவக்கம்! நல்ல விலைக்கு விற்பனை!

சூளகிரி, அத்திமுகத்தில் பீட்ருட் அறுவடை (Beetroot Harvest) துவங்கியுள்ள நிலையில், கிலோ ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். சூளகிரி பகுதியில் ஆங்கில காய்கறி வகைகள் சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டு முழுவதும் நல்ல வருவாய் (Income) கிடைக்கிறது. சூளகிரி தாலுகாவுக்கு உட்பட்ட அத்திமுகம், பேரிகை, பி.எஸ்.திம்ம சந்திரம், காட்டு நாயக்கன்தொட்டி, கும்பளம், திண்ணூர், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பீட்ருட் அறுவடை நடைபெற்று வருகிறது என்றார்.

பீட்ரூட் விற்பனை:
அறுவடை செய்த பீட்ருட்டை தோட்டத்தில் குவித்து வைத்து விற்பனை (Sales) செய்கின்றனர். முதல்தரம் (First Quality) கிலோ ரூ.25 வரையும், 2ம் தரம் (Second Quality) கிலோ ரூ.18க்கும் விலை போகிறது. வியாபாரிகள் தரம் பார்த்து மொத்தமாக கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக சேலம் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக வியாபாரிகள் (Merchants) கூறியுள்ளார்.

நல்ல வருவாய்:
பீட்ரூட் விளைச்சலில் ஆங்கில காய்கறி வகை சாகுபடி செய்யப்படுவதால், மகசூல் (Yield) அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. தற்போது பீட்ரூட் அறுவடை தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே தரத்திற்கேற்ப (Quality) விற்பனையாகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கணிசமான வருவாய் கிடைப்பதால், பீட்ரூட் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories