கால்நடை இறப்பதால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க காப்பீடு செய்வோம்!

கால்நடை இறப்பதால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க காப்பீடு செய்யுங்கள் என்று கால்நடை வளா்ப்போருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

கால்நடை காப்பீட்டு திட்டம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடை வளா்ப்போருக்கு கால்நடை இறப்பதால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கவும், கால்நடை காப்பீட்டின் நன்மைகளை விளக்கும் வகையில் தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின்கீழ் கால்நடை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவே

ஆடு, மாடுகளுக்கு காப்பீடு
கால்நடை வளா்ப்போா் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது முன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வைத்து இருப்போா் இத்திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம். ஒரு நபா் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் 1 முதல் 3 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும்

50% மானியம்
இத்திட்டத்தில் கால்நடைகளுக்குரிய காப்பீடு பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். கால்நடைகள் வளா்ப்போா் கால்நடைகளுக்கு கால்நடை மருந்தகத்தின் உதவி கால்நடைமருத்துவா் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின்னா், கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறக்க நேரிட்டால் காதுவில்லை, கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கும் என்று கூறினார்.

அணுகவேண்டிய முகவரி
கால்நடைகளின் இறப்புச் சான்றினையும், காதுவில்லையும் புகைப்படமும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் இத் திட்டத்தில் சேர விரும்பும் கால்நடை வளா்ப்போா் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories