நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அருமையான வாய்ப்பு- காலஅவகாசம் டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு பெற, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு 2020ம் ஆண்டு சிறப்பு பருவமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் 320 வருவாய் கிராமங்கள் அடங்கும்.

கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.444 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்வதற்கான அவசாகம் இம்மாதம் 15ம் தேதிக்குள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன் மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

கட்டண தொகை செலுத்திய பிறகு அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும், மேலும் விவரங் களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories