நெல்லுக்கு காப்பீடு செய்துவிட்டீர்களா? டிசம்பர் 15 வரை மட்டுமே!

நெல் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பயிரைப் பாதுகாத்து கொள்ள, டிசம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்

சம்பா II மற்றும் வெங்காயம் II பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நெல் II வால் சம்பா 21 பிர்க்காக்களிலும் மற்றும் வெங்காயம் II 4 பாக்காக்களிலும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளது.

கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories