ஆரஞ்சின் பயன்கள்

 

 

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இந்த பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும் நோயின் தாக்குதல் இன்றிஎன்றும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் இரவு படுப்பதற்கு செல்லும் முன்பு ஆரஞ்சு சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும் ,நரம்புகள் பலம் பெறும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி ஓமம் சுக்கு சேர்த்து இடித்து பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும் இதனால் சருமம் பளபளப்புடனும் நோயின் தாக்குதல் இன்றி இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories